< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெங்களூரு-மைசூரு இடையே மாற்று வழியில் பஸ்கள் இயக்கம்
|30 Aug 2022 3:57 AM IST
பெங்களூரு - மைசூரு இடையே மாற்று வழியில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு:
பெங்களூரு மாவட்ட போக்குவரத்து அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று பெய்த கனமழையால் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் உடைந்து பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் அரசு பஸ்கள் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூருவில் இருந்து புறப்படும் அரசு பஸ்கள் ஹரோஹள்ளி, கனகபுரா, மலவள்ளி வழியாக மைசூருவை சென்றடையும். நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் அகற்றப்பட்டு சரிசெய்யப்படும் வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.