< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

டெல்லியில் பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்

தினத்தந்தி
|
22 Sept 2022 5:01 AM IST

டெல்லியில் பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தனியார் விற்பனை நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், 'கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் பட்டாசுக்கு தடை விதிப்பதில், அதுவும் தலைநகரில் காற்றின் தரக்குறியீடு நல்ல நிலையில் இருக்கும்போது தடை விதித்ததில் எவ்வித அடிப்படையும் இல்லை, எனவே டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரித்தார். அப்போது அவர், 'இது தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளனவா?, இந்த மனுவின் நோக்கம் என்ன?' என்பது குறித்து விளக்கம் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

மேலும் செய்திகள்