< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
லட்சத்தீவில் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் நுழைய தடை விதிப்பு
|1 Jan 2023 9:56 PM IST
மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கவராத்தி,
லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ள நிலையில், 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. இந்த தீவுகளில் தேசதுரோக, சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக லட்சத்தீவுகள் நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
இதனால் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தடையை மீறி அந்த தீவுகளுக்குள் நுழைய முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.