< Back
தேசிய செய்திகள்
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ - ஜாமின் மறுப்பு
தேசிய செய்திகள்

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ - ஜாமின் மறுப்பு

தினத்தந்தி
|
9 Sep 2022 11:16 PM GMT

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லோக் இன்சப் கட்சி தலைவர் சிம்ரஜித் சிங் பைன்ஸ் (வயது 52). இவர் லுதியானா மாவட்டம் இட்டம் நகர் தொகுதி 2012 முதல் 2022 வரை எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, சொத்து தகராறு தொடர்பாக உதவி கேட்டு சென்ற தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிம்ரஜித் சிங் மீது கணவனை இழந்த 44 வயதான பெண் 2020-ம் ஆண்டு புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பெயரில் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சிம்ரஜித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிம்ரஜித் லுதியானா கோர்ட்டில் சரண் அடைத்தார்.

இதனை தொடர்ந்து சிம்ரஜித் சிங் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிம்ரஜித் சிங்கின் சகோதரன் பர்ம்ஜித் சிங் மற்றும் அவரது தனி உதவியாளர் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 12 மற்றும் 25-ம் தேதி ஜாமின் கிடைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சிறையில் உள்ள சிம்ரஜித் சிங் லுதியானா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த லுதியானா கூடுத்ல அமர்வு கோர்ட்டு சிம்ரஜித் சிங்கிற்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, சிம்ரஜித் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்