< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு ரெயில் நிலையத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பை, டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
|27 Oct 2022 7:16 PM IST
ஜம்மு ரெயில் நிலையத்தில் இருந்து வெடிபொருட்கள் அடங்கிய பை, டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு,
ஜம்மு ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே இன்று சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையில் வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து 18 டெட்டனேட்டர்கள் மற்றும் சில மின்கம்பிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வெடிகுண்டு அகற்றும் படையினரும் மோப்ப நாய் குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜிஆர்பி ஆரிப் ரிஷு கூறும்போது, "ஜம்மு ரெயில் நிலையத்தில் உள்ள டாக்ஸி ஸ்டாண்ட் அருகே ஒரு பையை மீட்டோம். அந்தப் பையில் 2 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
18 டெட்டனேட்டர்கள், சில மின்கம்பிகள் மற்றும் சுமார் 500 கிராம் மெழுகு வகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.