< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெண் போலீசுக்கு வளைகாப்பு வைபவம்
|21 Sept 2022 12:15 AM IST
மைசூருவில் பெண் போலீசுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது.
மைசூரு:
மைசூரு அருகே குவெம்பு நகர் போலீஸ் நிலையத்தில் எச்.கே.நாகவேணி என்பவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு சக போலீசார், வளைகாப்பு வைபவம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று குவெம்பு நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவருக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. இதையொட்டி பெண் போலீசார் அவரது நெற்றியில் குங்குமம், மஞ்சள் பூசினர். மேலும் கைகளில் வளையல் அணிந்து விட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவர்மா, சப்-இன்ஸ்பெக்டர் கோபால், மற்றும் பலரும் கலந்துகொண்டனர். மேலும் பழங்கள், இனிப்புகள் உள்ளிட்ட சீர்வரிசைகளையும் அவருக்கு வழங்கினர்.