< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை: மீட்புப் பணிகள் தீவிரம்
|16 Feb 2024 1:13 PM IST
குட்டி யானையை மீட்க வழி தெரியாமல் பிற யானைகள் அப்பகுதியிலேயே சுற்றித்திரிந்துகொண்டிருந்தன.
கொச்சி,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மலையாற்றூர் என்ற பகுதியில் ரப்பர் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது.
கிணற்றில் விழுந்து தவித்துக்கொண்டிருந்த குட்டி யானையை மீட்க வழி தெரியாமல் பிற யானைகள் அப்பகுதியிலேயே சுற்றித்திரிந்துகொண்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், விரைந்து வந்து குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நள்ளிரவில் யானைகள் கூட்டமாக வந்திருந்தபோது யானைக்குட்டி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். கிணற்றின் அருகிலேயே யானைக்கூட்டம் சுற்றித்திரிந்துகொண்டிருந்ததால், அவற்றை சிறிது தூரம் விரட்டிய பின்னர், குட்டியை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.