< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள மந்திரிக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள மந்திரிக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
14 Feb 2023 12:31 AM IST

மேற்கு வங்காள மந்திரிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருப்பவர் பாபுல் சுப்ரியோ (வயது 52). பாடகராக இருந்து அரசியல்வாதியான இவர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையையும் கவனித்து வருகிறார்.

இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. எனவே உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவருக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் விரைவில் வீடு திரும்புவார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. மந்திரி பாபுல் சுப்ரியோவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட விவகாரம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்