< Back
தேசிய செய்திகள்
ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை பெயர் மாற்றம் செய்தது மத்திய அரசு
தேசிய செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை பெயர் மாற்றம் செய்தது மத்திய அரசு

தினத்தந்தி
|
27 Nov 2023 4:46 AM IST

பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி,

ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசு, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மையங்களின் பெயரை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்