அயோத்தி கோவிலில் ராமர் சிலையை நிறுவும் விழா ஏற்பாடுகள் தீவிரம் - பிரதமர் மோடிக்கு அழைப்பு
|அயோத்தி கோவிலில் ராமர் சிலையை நிறுவும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் கருவறையில் வில் ஏந்திய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. ராமர் சிலையை நிறுவியதும் கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்காக திறக்கப்படும்.
அதன்படி கோவிலில் ராமர் சிலையை நிறுவும் விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில் ராமர் சிலையை நிறுவும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
விழாவில் கலந்துகொள்ள அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15 முதல் 24 வரை அவகாசம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.