டெங்கு, மலேரியா பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்
|கோலாரில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவலை தடுக்க 11-ந் தேதி முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என்று கலெக்டர் அக்ரம் பாஷா தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்
டெங்கு, மலேரியா பரவல்
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி கோலார் மாவட்டத்திலும் இந்த டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோலார் மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் டெங்கும், மலேரியா காய்ச்சல் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனை தடுக்கும்படி மாநில அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி கோலார் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோலார் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மழை நீர் தேங்கி இருக்கிறதா என்பதைஆய்வு செய்து வருகின்றனர்.
டெங்கு கொகுசு சுத்தமான தண்ணீர்களில்தான் பரவுகிறது. எனவே பொதுமக்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தடுப்பூசி விழிப்புணர்வு
மேலும் இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்கள் முன்கூட்டியே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் முறையான விழிப்புணர்வு இல்லை.
எனவே வருகிற 11-ந் தேதி தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். எதற்காக இந்த விழிப்புணர்வு என்றால் பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று சரியாக ஊசிகளை எடுத்து கொள்ளவேண்டும்.
அதேபோல மழை காலம் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும். சுகாதாரம் மிகவும் முக்கியமானது.
அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மருந்து, மாத்திரைகள் இருப்பில் இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கு உடனே சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இதற்கு பொதுமக்களுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.