< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது
தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது

தினத்தந்தி
|
7 March 2023 6:45 PM GMT

பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

2-வது முனையம்

பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு சமீபத்தில் தான் 2-வது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் அந்த முனையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச அளவில் பயணிகளுக்கு சேவை வழங்குவது தொடர்பாக சிறந்த விமான நிலையத்திற்கான போட்டியில் இந்த பெங்களூரு விமான நிலையமும் கலந்து கொண்டது.

'அரைவல் சர்வே குளுபலி' மற்றும் சர்வதேச விமான கவுன்சில் ஆகியவை இணைந்து பயணிகளின் கருத்து கேட்டதுடன் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக பெங்களூரு விமான நிலையத்தை தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் இது பயணிகளை மையப்படுத்தும் விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது.

கடின உழைப்பு

இதுகுறித்து பெங்களூரு விமான நிலைய நிர்வாக இயக்குனர் ஹரி மரார் கூறுகையில், 'கடந்த 2022-ம் ஆண்டில் அரைவல் சர்வே விஷயத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு உலக அளவில் முதல் இடம் கிடைத்துள்ளது. எங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய பணி மற்றும் உறுதிப்பாட்டுக்கு இந்த விருது சாட்சியாக உள்ளது. இந்த விருது பயணிகளின் கருத்து அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன' என்றார்.

மேலும் செய்திகள்