< Back
தேசிய செய்திகள்
இமயமலை பகுதியில் திடீர் பனிச்சரிவு - கேதர்நாத் கோவிலுக்கு சேதம் ஏற்படவில்லை என தகவல்
தேசிய செய்திகள்

இமயமலை பகுதியில் திடீர் பனிச்சரிவு - கேதர்நாத் கோவிலுக்கு சேதம் ஏற்படவில்லை என தகவல்

தினத்தந்தி
|
1 Oct 2022 9:59 PM IST

கேதர்நாத் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பத்ரிநாத், கேதர்நாத் கோவில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற புனித தளமான கேதர்நாத் ஆலயம் அமைந்துள்ளது. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த புனித தளத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைப் பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் இன்று இமயமலைப் பகுதியில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கேதர்நாத் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பத்ரிநாத், கேதர்நாத் கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்