< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
8 Sept 2024 4:21 AM IST

பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி லோகேஷ் என்பவர், கடந்த 4-ந்தேதி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லோகேஷை போலீசார் கைது செய்தனர்.

லோகேஷிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை மது அருந்த செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி, உஜ்ஜைனில் பரபரப்பான சாலை நடைபாதையில் பட்டப்பகலில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் முகமது சலீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாலை நடைபாதையில் நடந்த பாலியல் வன்கொடுமையை முகமது சலீம் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து, பின்னர் அதை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது முகமது சலீமை கைது செய்துள்ள போலீசார், அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்