சிறுமிகள் உள்பட 5 பெண்களை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
|ஆட்டோ டிரைவர் பானபங்கம் செய்ததாக 4 இளம்பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.
மும்பை,
மும்பை காந்திவிலி கிழக்கு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மாதம் 28-ந் தேதி மதியம் டியூஷன் வகுப்பு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது, சிறுமி அருகே ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் திடீரென சிறுமியை தொட்டு மானபங்கம் செய்துவிட்டு தப்பி சென்றார். சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இது பற்றி பெற்றோர் சம்ந்தாநகர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் சிறுமியை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் யார் என விசாரித்தனர். இதில், சிறுமியை மானபங்கம் செய்தது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரோகித் போசலே(வயது25) என தெரியவந்தது. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த 17, 19, 26, 27 வயதுயுடைய 4 இளம்பெண்கள் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் தங்களையும் அதே ஆட்டோ டிரைவர் ரோகித் போசலே மானபங்கம் செய்ததாக புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் ரோகித் போசலேவை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரோகித் போசலே போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.