< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்
|13 Aug 2023 1:46 AM IST
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகிறார்.
புதுடெல்லி,
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் இந்தியா வருகிறார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நட்பு நாடுகளுடன் எதிர்கொள்ள ஜி20 போன்ற சர்வதேச மாநாடுகள் முக்கியமானவை. வளர்ச்சி, இறையாண்மை மற்றும் நீடித்த அமைதிக்காக ஆஸ்திரேலியா எப்போதும் துணைநிற்கும், என அவர் கூறினார். மாநாடு முடிவுக்கு பின் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அல்பானிஸ் செல்ல உள்ளார்.