< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் ஆடிட்டர் சுட்டுக்கொலை..!
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ஆடிட்டர் சுட்டுக்கொலை..!

தினத்தந்தி
|
17 Feb 2023 5:32 AM IST

உத்தரபிரதேசத்தில் ஆடிட்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மொரதாபாத்,

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் அருகே ராம் கங்காநகரில் வசித்தவர் ஸ்வேதப் திவாரி (வயது 53). ஆடிட்டரான இவர் மஜ்கோலாவில், கட்டுமான துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

அவர் பணி முடிந்து வெளியே வந்த சமயத்தில் மர்ம நபரால் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போன் உரையாடல்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகிறார்கள். குற்றவாளி பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்