< Back
தேசிய செய்திகள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
1 Dec 2022 2:42 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனிடையே, சில ஆண்டுகளாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, எந்தக் காரணத்தைக் கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்