< Back
தேசிய செய்திகள்
ஏடிஎம் இயந்திரத்தில் பட்டாசு வெடித்து கொள்ளை முயற்சி.. காட்டி கொடுத்த அபாய ஒலி
தேசிய செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தில் பட்டாசு வெடித்து கொள்ளை முயற்சி.. காட்டி கொடுத்த அபாய ஒலி

தினத்தந்தி
|
14 Feb 2023 7:13 PM IST

போலீசார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு சென்ற நிலையில், அந்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஏடிஎம் ஒன்றில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், பட்டாசு வெடித்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். உடனடியாக வங்கியின் கிளை மேலாளருக்கு அபாய ஒலி சென்றதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு சென்ற நிலையில், அந்த நபர் தப்பிச்சென்றுள்ளார். பெரும் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்ட நிலையில், ஏடிஎம் இயந்திரத்தில் பட்டாசு வெடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்