< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகார் மாநில தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் திருட முயற்சி
|26 Oct 2022 2:31 AM IST
தலைமைச் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பாட்னா,
பீகார் மாநில தலைமை செயலாளர் அமிர் சுபானி. இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை நேற்று முன்தினம் யாரோ திருட முயன்றுள்ளனர். இது குறித்து தெரிய வந்ததும் அவர் மாநில பொருளாதாரம் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மோசடி கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூடுதல் டி.ஜி.பி. நய்யார் ஹஸ்நைன் கான் தெரிவித்தார். தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்தே பணம் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.