< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயற்சி - ஒருவர் கைது
|20 Jan 2024 12:52 AM IST
வெனீசுலா நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது வெனீசுலா நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 628 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.6.2 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.