< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தனியாக உள்ள பெண்களை குறிவைத்து தாக்குதல்... ஆந்திராவை அலற விட்ட சீரியல் கில்லர்..!
|20 Aug 2022 3:54 PM IST
ஆந்திராவில் தனியாக உள்ள பெண்களை குறிவைத்து கொலை செய்வதும், பாலியல் வன்கொடுமை செய்வதுமாக இருந்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் தனியாக உள்ள பெண்கள் பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த போது சிக்கினார் சந்தக ராம்பாபு. இவரின் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கோவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதன்பேரில் ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். இரும்பு கம்பியால் பெண்களை அடித்துக் கொலை செய்து வந்ததும் தெரியவந்த நிலையில் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.