< Back
தேசிய செய்திகள்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்... வயிற்றில் இருந்த குழந்தை சாவு
தேசிய செய்திகள்

வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்... வயிற்றில் இருந்த குழந்தை சாவு

தினத்தந்தி
|
5 Jun 2024 10:55 AM IST

அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி அழுதுள்ளனர்.

மைசூரு,

மைசூரு நகர் சாமுன்டிமலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு சசிகலா மற்றும் சந்தனா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரையும் சவுகார் உண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான தர்மராஜ், வினோத்ராஜ் என்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

மேலும், திருமணத்துக்கு 2 மகள்களுக்கும் தலா 30 கிராம் நகை, மாப்பிள்ளைகளுக்கு தலா 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து திருமணம் நடைபெற்றது. அப்போது 2 மகள்களுக்கும் தலா 10 கிராம் நகை மட்டும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மீதமுள்ள 40 கிராம் நகை, மோட்டார் சைக்கிளை வாங்கி வரும்படி மாப்பிள்ளை வீட்டார், சசிகலா, சந்தனாவை கொடுமை படுத்தி உள்ளனர். மேலும் தாக்கி உள்ளனர். அதில் சந்தனா கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் மீதும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தினர். அதில் அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்தது.

இதையடுத்து அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி அழுதுள்ளனர். இதையடுத்து மோகன்ராஜ், மருமகன்கள் தர்மராஜ், வினோத்ராஜ் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது இலவாலா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இலவாலா போலீசார், 4 பேர் மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்