< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முன்னாள் எம்.எல்.ஏ. மீது நக்சலைட் தாக்குதல்: 8 இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் சோதனை
|16 March 2023 1:42 AM IST
முன்னாள் எம்.எல்.ஏ. மீது நக்சலைட் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 8 இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி,
ஜார்கண்டை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குருசரண் நாயக், நக்சலைட் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். அப்போது 2 போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி 1-ந்தேதி இந்த வழக்கில் 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அவர்கள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். சோதனையின்போது அவர்களிடம் இருந்து சில போஸ்டர்கள், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.