< Back
தேசிய செய்திகள்
சிறுவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது
தேசிய செய்திகள்

சிறுவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
28 Sept 2022 12:15 AM IST

சிறுவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:


பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் வீட்டில் தனி அறையில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சிறுவனை கடத்திவிட்டு, வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும், அவர்கள் ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே மகனை விடுவிப்பதாக கூறினர். இதையடுத்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்போன் சிக்னலை பயன்படுத்தி, கடத்தலில் ஈடுபட்ட சுனில் குமார், நாகேஷ் ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்