< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் கொடூரம்:  பள்ளிக்கு சென்ற மாணவியின் சடலம் பைக்குள் கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொடூரம்: பள்ளிக்கு சென்ற மாணவியின் சடலம் பைக்குள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
27 Aug 2022 10:36 AM IST

மராட்டியத்தில் பள்ளிக்கு சென்ற 15 வயது மாணவியின் உடல் பலத்த காயங்களுடன் பைக்குள் திணித்து வைக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

புனே,



மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகே பை ஒன்று கிடந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் இதுபற்றி வாலிவ் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் படை ஒன்று சம்பவ பகுதிக்கு சென்றுள்ளது. அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து, வசாய் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. 15 வயதுடைய அந்த சிறுமி மும்பையின் அந்தேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நேற்று மாலை வரை வீட்டுக்கு திரும்பி வராத நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமியின் உடல் கிடைத்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்