< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி
|4 Aug 2022 10:01 PM IST
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா விஜயப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரசு கல்லூரி அருகே தனியார் வங்கியின்ஏ.டி.எம். மையம் உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் ரோந்து வாகனத்தில் போலீசார் வந்தனர்.
இதனை பார்த்த மா்மநபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம்.மில் இருந்த பல லட்சம் ரூபாய் மர்மநபர்கள் கையில் சிக்காமல் தப்பியது. இதுகுறித்து விஜயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.