< Back
தேசிய செய்திகள்
பாஜக செய்தித் தொடர்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி மந்திரி அதிஷிக்கு ஜாமீன்
தேசிய செய்திகள்

பாஜக செய்தித் தொடர்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி மந்திரி அதிஷிக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
23 July 2024 12:11 PM IST

ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களை பாஜக தொடர்பு கொண்டு, அக்கட்சியில் சேரும்படியும் அப்படி சேர்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி தருவதாக கூறி ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்ததாக டெல்லி மந்திரி அதிஷி சமீபத்தில் பாஜக மீது குற்றம் சாட்டிருந்தார். இது பொய்யான குற்றச்சாட்டு என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் டெல்லி மந்திரி அதிஷி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதற்காக டெல்லி மந்திரி அதிஷி கோர்ட்டிற்கு வந்தார். அப்போது ரூ.20,000 பிணை தொகையுடன் அதிஷிக்கு கோர்ட்டு ஜாமீன் வழக்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்