< Back
தேசிய செய்திகள்
ஆதிக் அகமது சுட்டுக் கொலை: உத்தர பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு
தேசிய செய்திகள்

ஆதிக் அகமது சுட்டுக் கொலை: உத்தர பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு

தினத்தந்தி
|
16 April 2023 7:53 AM IST

உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

முன்னாள் எம்.பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர்.

செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் எதிரொலியால், உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்