< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 5 சிறுமிகள் மீட்பு

17 July 2022 8:22 PM IST
தார்வார் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
உப்பள்ளி;
தார்வார் பழைய பஸ் நிலையம் அருகே சிறுமிகள் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் 5 சிறுமிகள் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். இதையடுத்து அதிகாரிகள், 5 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும் சிறுமிகளை பிச்சை எடுக்க வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.