< Back
தேசிய செய்திகள்
ராபர்ட்சன்பேட்டையில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேசிய செய்திகள்

ராபர்ட்சன்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

ராபர்ட்சன்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கட்சியின் மாவட்ட தலைவர் ஜோதி பாசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராபர்ட்சன்பேட்டை

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கட்சியின் மாவட்ட தலைவர் ஜோதி பாசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கச்சுரங்க பகுதியில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் வீடுகளை அவர்களுக்கே பட்டா செய்து கொடுக்க வேண்டும், தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.52 கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்ட தலைவர் ஜோதிபாசு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்