ஒசநகரில் சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
|ஒசநகரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா-
ஒசநகரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பலாத்காரம்
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். அவள் அப்பகுதியில் உள்ள பி.யூ.சி. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். இந்தநிலையில், சிறுமி கல்லூரிக்கு செல்லும்போது அதேப்பகுதியை சேர்ந்்த வாலிபர் ஒருவர் அவளிடம் பேசி வந்துள்ளார்.
இதனால் அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில், சிறுமியை வாலிபர் ஒசநகருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கு அறை எடுத்து தங்கினர். அப்போது, சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதனை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இந்தநிலையில், சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள்.
வாலிபர் கைது
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஒசநகர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் ஒசநகர் பகுதியில் வாலிபர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.