< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

முல்லை பெரியாறு அணையில் நில அதிர்வை கண்டறியும் கருவி பொருத்தம்

தினத்தந்தி
|
23 Feb 2023 11:00 PM IST

அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வுகளை கண்டறியும் 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்தம் பணி நடைபெற்று வருகிறது. சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு மானி பொருத்தப்படுகிறது.

ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் நிலநடுக்க ஆய்வுக்குழுவிற்கு தகவல் செல்லும் வகையிலும் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்