< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியப்பிரதேசம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
|23 Jun 2022 6:18 PM IST
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்தூர்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
இன்று மதியம் இந்தூரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் காண்ட்வா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 2 மணியளவில் சிம்ரோலுக்கும் கோரல் கிராமத்துக்கும் இடையே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு இந்தூரில் உள்ள என்ஒய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.