< Back
தேசிய செய்திகள்
ஆண்டர்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு
தேசிய செய்திகள்

ஆண்டர்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
2 Sept 2023 12:15 AM IST

ஆண்டர்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் முழுவதும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆண்டர்சன்பேட்டையில் நேனியல் சாலை முதல் சாம்பியன் ரெயில் நிலையம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது.

சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால், அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும் அந்த சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அங்கு பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதனால் சாலையை சீரமைப்பதுடன், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், பாதாள சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்