< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜிம்மிற்கு சென்று இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் 68 வயது மூதாட்டி...!
|4 Aug 2023 12:44 PM IST
வயதானாலும் வாழ்க்கையில் புதிய முயற்சிகளுக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 68 வயதான பெண் ஒருவர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் ஜிம்மில் 68 வயது மூதாட்டி உடற்பயிற்சி செய்து, இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். வாதம் நோயால் பாதிக்கப்பட்டு வந்த ரோசிணி தேவி என்ற மூதாட்டி உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வயதானாலும் வாழ்க்கையில் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என நிரூபிக்கும் வகையில், 68 வயதான மூதாட்டி ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
வீடியோவில், அந்த பெண் தனது மகன் அஜய் சங்க்வானுடன் சேர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை காண முடிகிறது. அவருக்கு மகன் உடற்பயிற்சி குறித்த அறிவுறுத்தல்களை கூறுகிறார்.
அதன்படி அந்த பெண் எடையை தூக்குவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பிற பயிற்சிகளை உற்சாகத்துடன் செய்யும் காட்சிகள் இணைய பயனர்களை ஈர்த்துள்ளன.