< Back
தேசிய செய்திகள்
ஆன்லைன் மூலம் சொத்து ஆவணங்கள் பெறும் வசதி பெங்களூருவில் அறிமுகம்
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் சொத்து ஆவணங்கள் பெறும் வசதி பெங்களூருவில் அறிமுகம்

தினத்தந்தி
|
10 Jun 2022 2:58 PM GMT

பெங்களூருவில் ஆன்லைன் மூலம் சொத்து ஆவணங்கள் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சியில் வருவாய்த்துறையில் வழங்கும் சேவைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. மக்களுக்கு விரைவாக சேவைகள் கிடைக்கும் நோக்கத்தில் மின்னணு சொத்து தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதை சோதனை அடிப்படையில் கிழக்கு மண்டலத்தில் 3 வார்டுகளில் அறிமுகம் செய்துள்ளோம்.


சொத்து உரிமையாளர்கள் அருகில் உள்ள உதவி வருவாய் அதிகாரியை நேரில் சந்தித்து ஆவணங்களை வழங்க வேண்டும். அதன் பிறகு பட்டா ஆவணங்களை டிஜிட்டல் மூலம் பெற்று கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களை வழங்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு துஷார் கிரிநாத் பேசினார்.

இதில் சிறப்பு கமிஷனர்கள் தீபக், துளசி மத்தினேனி, திரிலோக் சந்திரா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்