< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது - சுப்ரியா சுலே
தேசிய செய்திகள்

'சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது' - சுப்ரியா சுலே

தினத்தந்தி
|
3 Dec 2023 5:28 PM IST

தற்போதைய சூழலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளை தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சட்டசபை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் வேறு வேறானவை. சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூற முடியாது. கடந்த 2019-ல், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களவை தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன.

தற்போதைய சூழலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. யார் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்களை நாம் வாழ்த்த வேண்டும். தற்போதைய சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது. அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகள்."

இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்