தேசிய செய்திகள்
மதராசா என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அசாம் முதல்-மந்திரி பேச்சு

Image Courtesy: PTI

தேசிய செய்திகள்

'மதராசா' என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அசாம் முதல்-மந்திரி பேச்சு

தினத்தந்தி
|
23 May 2022 3:15 PM IST

’மதராசா’ என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தைகள் தங்கள் மத போதனைகளை கற்றுக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட மதரீதியிலான கல்வியியல் அமைப்பே 'மதராசா' ஆகும். பல்வேறு மாநிலங்களில் மதராசாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கி வருகின்றன.

இதற்கிடையில், மதராசாக்களை நீக்கிவிட்டு அவற்றை பொதுவான பள்ளிக்கூடங்களாக மாற்ற அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மதராசா என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிஸ்வா:-

'மதராசா' என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மதராசா என்ற இந்த வார்த்தை இருக்கும் வரை டாக்டர், என்ஜினியராவது குறித்து குழந்தைகளால் சிந்திக்க முடியாது. மதராசாக்களில் படித்தால் நீங்கள் டாக்டர், என்ஜினியர்களாக முடியாது என குழந்தைகளிடம் கூறினால் அவர்களே மதராசா செல்லமாட்டார்கள்.

உங்கள் (இஸ்லாமிய மதத்தினர்) குழந்தைகளுக்கு குர்ஆன் கற்றுக்கொடுங்கள். ஆனால், அதை உங்கள் வீட்டில் வைத்து கற்றுக்கொண்டுங்கள். மதசாராக்களில் குழந்தைகள் சேர்க்கப்படுதல் அந்த குழந்தைகளின் மனித உரிமைகளுக்கு எதிரானது.

அறிவியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களிலில் தான் அழுத்தம் இருக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் பொதுவான கல்வி இருக்க வேண்டும். மதம் சார்ந்த பாடங்கள் வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கூட்டங்களில் அவர்கள் ( இஸ்லாமிய மாணவ/மாணவிகள்) டாக்டர், என்ஜினியர், பேராசிரியர், விஞ்ஞானியாவது எப்படி என்பது குறித்து கற்க வேண்டும்.

அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள் தான். இந்தியாவில் இஸ்லாமியராக யாரும் பிறக்கவில்லை. இந்தியாவில் அனைவரும் இந்துக்கள் தான். ஒரு இஸ்லாமிய குழந்தை மிகவும் திறமையாக இருந்தால் நான் அந்த குழந்தையின் முந்தைய இந்துவுக்கும் சிறிது நன்றி செலுத்துவேன்' என்றார்.

மேலும் செய்திகள்