3 பேரை தாக்கி காயப்படுத்திய சிறுத்தையை கொன்ற கிராம மக்கள்
|அசாமில் 3 பேரைத் தாக்கி காயப்படுத்திய சிறுத்தையை கிராம மக்கள் கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோலாகட்
அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் உள்ள பர்பதர் தெங்கனி பகுதியில் 3 பேரைத் தாக்கி காயப்படுத்திய சிறுத்தையை கிராம மக்கள் கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் உடலை மீட்டனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சட்டத்தின்படி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்டது.
முன்னதாக கடந்த மார்ச் 20-ந்தேதி மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள வார்ஜே பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து புனே வனத்துறையினர், ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பிறகு அந்த சிறுத்தையை மீட்டனர்.