< Back
தேசிய செய்திகள்
அசாம்; காண்டாமிருக தாக்குதல் மற்றும் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்
தேசிய செய்திகள்

அசாம்; காண்டாமிருக தாக்குதல் மற்றும் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

தினத்தந்தி
|
13 April 2024 7:22 PM IST

காண்டாமிருகத்தை விரட்டுவதற்காக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

திஸ்பூர்,

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் இருந்து வெளியே வந்த காண்டாமிருகம், இன்று காலை அந்த பகுதி வழியாக சென்ற இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், ஜோர்ஹாட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேர்கான் பகுதியில் காண்டாமிருகத்தை விரட்டுவதற்காக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். அந்த நபரை வனத்துறை அதிகாரிகள் மீட்டு ஜோர்ஹாட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களின் உடல்நிலையையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்