அசாம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காம்ரூப்,
அசாம் மாநிலம் காம்ரூப் பகுதியில் நேற்று இரவு சிறப்பு அதிரடிப்படையினரால் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 36 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுபற்றி சிறப்பு அதிரடிப்படை டிஐஜி பார்த்த சாரதி மஹந்தா கூறுகையில், "மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கல்யாண் குமார் பதக் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை குழுவினர், அமிங்கோன் பகுதியில் ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் ரகசிய அறை ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த அறையை திறந்து பார்த்தபோது, அதில் 36 சிறிய பைகளில் 36 கிலோ எடையுள்ள போதைப்பொருள் இருந்தது. அந்த பைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஷபிகுல் அலி (39), மம்துல் அலி(31), ராஜு அஜ்லி (35) மற்றும் ஐனுல் ஹக்(38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.