< Back
தேசிய செய்திகள்
அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது
தேசிய செய்திகள்

அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது

தினத்தந்தி
|
19 Sep 2022 10:57 AM GMT

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரீம்கஞ்ச்,

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கரீம்கஞ்ச் மாவட்டம் பதர்கண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கபரிபண்ட் கிராமத்தில் சிறப்புக் குழு ஒன்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது ஜமில் உதின் என்பவரின் வீட்டில் இருந்து 690 கிராம் ஹெராயின் அடங்கிய 49 சோப்பு டப்பாக்களை போலீசார் மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜமீல் உதின் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து கரீம்கஞ்ச் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பர்தா பிரதிம் தாஸ் கூறும்போது, மீட்கப்பட்ட போதைப் பொருள் கேஸ் சிலிண்டருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 690 கிராம் ஹெராயின் அடங்கிய 49 சோப்பு டப்பாக்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 4.50 கோடி ரூபாய் என்று அவர் கூறீனார்.

மேலும் செய்திகள்