< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாம்: தனது துப்பாக்கியால் சக காவலரை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் கைது
|6 Dec 2022 1:09 PM IST
அசாமில் சக காவலரை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
சாரேடியோ,
அசாம் மாநிலத்தில் உள்ள சாரெய்டியோவில் சக காவலரை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சோனாரி காவல் நிலையத்தின் போலீஸ் கான்ஸ்டபிள் ககாதியை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்கான்ஸ்டபிள் தீபக் காகதி என்பவர், தனது சர்வீஸ் ரைபில் மூலம் தனது சக காவலரான ககுல் பாசுமதரியை சுட்டுக் கொன்றார் என்று சாரெய்டியோவின் காவல்துறை கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தின் இருந்த மற்ற காவலர்கள் உடனடியாக பாசுமதரியை மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறிய போலீசார், ககாதி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைதுசெய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.