< Back
தேசிய செய்திகள்
பாலியல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த அசாம் எம்எல்ஏ-வுக்கு ஜாமீன்
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த அசாம் எம்எல்ஏ-வுக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
18 Jun 2023 12:59 AM IST

பாலியல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த அசாம் எம்எல்ஏ ஜாமீன் பெற்றார்.

அசாம்,

பாலியல் வழக்கில் அசாம் எம்எல்ஏ நிஜாம் உதின் சவுத்ரி ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். அவருக்கு எதிராக நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, ஹைலகண்டி மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன் சவுத்ரி சரணடைந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பெண்ணால் எம்எல்ஏ நிஜாம் உதின் சவுத்ரி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜராகி பின்னர் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்