அசாம்: கவுகாத்தி நீதிமன்றத்திற்கு 'ஜீன்ஸ் பேண்ட்'அணிந்து வந்த வழக்கறிஞர் வெளியேற்றம்..!
|கவுகாத்தி நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’அணிந்து வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ' ஜீன்ஸ் பேண்ட் ' அணிந்து கொண்டு ஒரு ஜாமீன் மனு விசாரணைக்கு நேற்று ஆஜராக வந்தார். இதை பார்த்த நீதிபதி கல்யாண் ராய் சுரானா அதிருப்தி அடைந்தார்.
உடனடியாக நீதிபதி போலீசை வரவழைத்து அந்த வக்கீலை கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். அவர் தரப்பு ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒரு வாரத்துக்கு நீதிபதி கல்யாண் ராய் சுரானா ஒத்தி வைத்தார்.
இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், " கற்றறிந்த வக்கீல் பி.கே.மகாஜன், மனுதாரருக்காக ஆஜராக வந்தபோது, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்துள்ளார். எனவே அவரை ஐகோர்ட்டு வளாகத்துக்கு வெளியே அழைத்துச்செல்ப்பட்டார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தினை தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிபதி கல்யாண் ராய் சுரானா உத்தரவிட்டார். மேலும், அசாம், நாகாலாந்து, மிசோரம், அருணாசலபிரதேச பார் கவுன்சில்களுக்கும் இதுபற்றி தெரிவிக்க ஆணையிட்டார்.
வழக்கறிஞர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த அசாம் ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.