< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|14 Oct 2024 5:58 PM IST
அசாமில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
நாகாலாந்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் ஜோராபத் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து அதில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 537.2 கிராம் ஹெராயின் அடங்கிய 45 சோப்புப் பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இந்த ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ. 4 கோடிக்கு மேல் இருக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் லாரியை ஓட்டி வந்த போதைப்பொருள் சப்ளையரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.