< Back
தேசிய செய்திகள்
அசாம் முதல்-மந்திாி குறித்து அவதூறு: கல்லூரி பேராசிரியர் கைது
தேசிய செய்திகள்

அசாம் முதல்-மந்திாி குறித்து அவதூறு: கல்லூரி பேராசிரியர் கைது

தினத்தந்தி
|
23 May 2022 5:30 AM IST

கல்லூரி இணைப் பேராசிரியர் ஒருவர், அசாம் அரசின் கொள்கைகளை விமர்சித்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இணைப் பேராசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், அசாம் அரசின் கொள்கைகளை விமர்சித்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். அதில் அசாம் முதல்-மந்திரி குறித்தும், கல்வி மந்திரி குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார்.

அந்த மின்னஞ்சல்களில் குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை பற்றியும், அசாம் மாநில அரசுப் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்காக தற்போது நடைபெறும் 'குணோத்சவ்' நிகழ்வு குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

சூப்பிரண்டு தவிர, மாவட்டத்தின் வேறு அதிகாரிகளுக்கும் அவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பேராசிரியரிடம் விசாரணை நடத்தி நேற்று அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்