< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதியை சுற்றி வளைத்து என்கவுன்டர் - பாதுகாப்பு படை தகவல்
|14 Nov 2022 2:25 PM IST
அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது.
டின்சுகியா மாவட்டத்தில் உள்ள பெங்கேரி-டிக்போய் சாலையில் உள்ள போர்பதர் பகுதியில் இந்திய ராணுவம், அசாம் மாநில போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், டின்சுகியா மாவட்டத்தில் பெங்கேரி-டிக்போய் சாலையில் போர்பத்தர் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது. பாதுகாப்பு படையினரும், போலீசாரும் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்துள்ளனர் என்றார்.