< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சியை நடத்த முடிவு:  அசாம் முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சியை நடத்த முடிவு: அசாம் முதல்-மந்திரி

தினத்தந்தி
|
23 March 2023 10:25 PM IST

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் கட்டுமான பணிகளை இன்று பார்வையிட்டார்.


கவுகாத்தி,


அசாமில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் முதல்-மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். இந்நிலையில், கவுகாத்தி நகரில் கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி அந்த பகுதிக்கு சென்று, முக்கிய கட்டிடம், நடைபாதைகள் உள்ளிட்ட அதன் கட்டுமான பணிகளை இன்று முழு அளவில் பார்வையிட்டார். நிறைவடைய தயாராக உள்ள பணிகளையும் அவர் மறுஆய்வு செய்து உள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி அசாமுக்கு வருகிறார். அப்போது, சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெறும் கின்னஸ் உலக சாதனைக்கான பிகு நடன நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

இந்நிகழ்ச்சியின்போது, அந்த நாளில் கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை அவரது தலைமையில் தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியை நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்